Published : 05 Nov 2014 11:55 AM
Last Updated : 05 Nov 2014 11:55 AM

ஆந்திராவில் ரூ.2 கோடி செம்மரங்கள் பறிமுதல்

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் தமிழகத்துக்கு கடத்த முயன்ற ரூ. 2 கோடி மதிப்பிலான செம்மரங்களை போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 34 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருப்பதி சேஷசலம் வனப்பகுதி யில் இருந்து தினந்தோறும் டன் கணக்கில் செம்மரங்கள் தமிழகம், கர்நாடகம் போன்ற மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்கும் வகையில் சித்தூர் - கடப்பா நெடுஞ்சாலையில் உள்ள பீலேர் பகுதியில் போலீ ஸார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பீலேரில் இருந்து சித்தூர் நோக்கிச் சென்ற 9 கார் மற்றும் ஜீப்புகளை போலீஸார் நிறுத்தி சோதனையிட்டனர். இந்த சோதனையில் வாகனங்களில் ரூ. 2 கோடி மதிப்பிலான செம்மரங் கள் இருப்பது தெரியவந்தது. இவை சித்தூர் வழியாக வேலூ ருக்கு கடத்தப்பட இருந்தது விசார ணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக வாகனங் களில் பயணம் செய்த வேலூர், திருவண்ணாமலை மாவட் டங்களை சேர்ந்த 34 கூலித் தொழி லாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து பீலேர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x