Published : 08 Nov 2014 01:09 PM
Last Updated : 08 Nov 2014 01:09 PM

நிழல் அமைச்சரவை குழுக்கள்: காங்கிரஸ் புதிய வியூகம்

மக்களவையில் காங்கிரஸுக்கு 44 உறுப்பினர்களே உள்ளதால் அந்தக் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படவில்லை. இதையடுத்து மத்திய அரசின் தவறுகளை மக்களிடம் எடுத்துச் செல்ல 7 நிழல் அமைச்சரவை குழுக்களை காங்கிரஸ் உருவாக்கியுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. அப்போது பல்வேறு மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன. அந்த மசோதாக்களின் நிறை, குறைகள் குறித்து சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் விமர்சனங்களை முன்வைக்க காங்கிரஸ் புதிய வியூகம் வகுத்துள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் ஏ.கே. அந்தோனி, வீர்ப்ப மொய்லி, ஆனந்த் சர்மா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், மல்லிகார்ஜுன கார்கே, குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் நிழல் அமைச்சரவைக் குழுக்களில் முக்கிய உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

பிரிட்டனை பின்பற்றி இந்த நடைமுறையை காங்கிரஸ் அறிமுகம் செய்துள்ளது. அந்த நாட்டில் எதிர்க்கட்சி சார்பில் பல்வேறு துறைகளுக்கு நிழல் அமைச்சரவைக் குழுக்கள் உருவாக்கப்பட்டு அரசின் குறைகள், தவறுகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. அதே அணுகுமுறையை முன்மாதிரியாக கொண்டு காங்கிரஸ் சார்பில் நிழல் அமைச்சரவைக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, ட்விட்டரை விவாத மேடையாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x