Published : 05 Nov 2014 10:00 AM
Last Updated : 05 Nov 2014 10:00 AM

தேர்தல் சூழ்நிலையை சீர்குலைக்கும்: ஒமர் அப்துல்லா

பத்காமில் ராணுவத்தினர் சுட்டதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த விவகாரம், தேர்தல் சூழ்நிலையை சீர்குலைக்கும் வகையில் அமைந் துள்ளது என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.

மாநிலத்தின் பாதுகாப்பு நிலை மேம்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்களுக்கு இடம்தரக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் பத்காமில் உள்ள சத்தர்காம் பகுதியில் 2 இளை ஞர்களை ராணுவத்தினர் நேற்று முன்தினம் சுட்டுக் கொன்றனர்.

தடுப்புகளை தகர்த்துவிட்டுச் செல்ல முயன்றதால்தான், அவர் கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று ராணுவத் தரப்பில் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறும்போது, “2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. இது தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்படும். குற்றம் செய்தது நிரூபணமானால், சம்பந்தப் பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டர் இணையதளத்தில் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளதாவது:

2 இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.

மாநிலத்தில் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் குறைந்து, பாது காப்பு நிலை மேம்பட்டு வருகிறது. இத்தகைய நிலையில், இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருக்கக் கூடாது.

ஏற்கெனவே, வெள்ளப் பாதிப்பு காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில மக்கள் சிரமமடைந்து வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவம், அமைதியான தேர்தல் சூழ்நிலையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காஷ்மீரில் 5 கட்டங்களாக சட்ட சபைத் தேர்தல் நடைபெறவுள் ளது. முதல் கட்டத் தேர்தல் வரும் 25-ம் தேதி நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x