Published : 27 Aug 2017 12:30 PM
Last Updated : 27 Aug 2017 12:30 PM

தனியார் விருதை புறக்கணித்தார் சந்திரசேகர ராவ்

இந்திய கவுன்சில் ஆஃப் ஃபுட் அண்ட் அக்ரிகல்சர் (ஐசிஎஃப்ஏ) சார்பில் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவுக்கு வரும் செப்டம்பர் 5-ம் தேதி டெல்லியில் விவசாய தலைமை விருது வழங்கப்படும் என கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதை அறிந்த தெலங்கானா முதல்வர், அவரது அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைத்து பிரிவினரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், ஆளுநர் நரசிம்மனும் முதல்வருக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.

ஆனால், இது தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்படும் விருது என்று தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தெலங்கானா முதல்வர் இந்த விருதை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x