Published : 16 Aug 2017 09:43 AM
Last Updated : 16 Aug 2017 09:43 AM
சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு 70 வயதை கடந்த சமூக ஆர்வலர் ஒருவர் 70 அரசு பள்ளி மாணவர்களை தத்தெடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்தவர் பர்வதரெட்டி பார்த்தசாரதி நாயுடு (76). சமூக ஆர்வலரான இவர், கடந்த 40 ஆண்டுகளாக ஏழை பள்ளி மாணவ, மாணவியருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இவர், பல நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியருக்கு பாட புத்தகங்கள், பள்ளி சீருடைகள், மற்றும் உணவும் அளித்து அவர்கள் கல்வி கற்க மிகவும் உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில், பார்த்தசாரதி நாயுடு, சுதந்திர தினவிழாவினையொட்டி, சித்தூரில் உள்ள ஒரு நகராட்சி பள்ளியில் படிக்கும் 70 மாணவ, மாணவியரை தத்தெடுத்துள்ளார்.
அவர்களுக்கு தேவையான பள்ளி சீருடைகள், பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் போன்றவற்றுடன் இலவச உணவும் வழங்க முன்வந்துள்ளார். இவரது இந்த பெருந்தன்மையை பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் பாராட்டி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT