Published : 18 Aug 2017 10:08 AM
Last Updated : 18 Aug 2017 10:08 AM
2012-13 மற்றும் 2015-16 நிதியாண்டுகளில் 5 தேசியக் கட்சிகள் பெற்ற நன்கொடைத் தொகை ரூ.1,070.68 கோடி. இதில் 89% அதாவது ரூ.956.77 கோடி கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அளித்த நன்கொடையாகும். இதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் நன்கொடைகளில் பாஜக மட்டும் ரூ.705.81 கோடி பெற்றுள்ளது. அதாவது 2,987 கார்ப்பரேட் நிறுவனங்கள் பாஜகவுக்கு இந்த நன்கொடையை அளித்துள்ளது.
ஜனநாயகச் சீர்த்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள இந்தப் புள்ளி விவரங்களின்படி கார்ப்பரேட் நிறுவன நன்கொடைகளில் மற்ற 4 கட்சிகள் பெற்றதவிட பாஜக 3 மடங்கு அதிக நன்கொடைகளைப் பெற்றுள்ளது. அடுத்ததாகப் பயனடைந்த தேசியக் கட்சி காங்கிரஸ், இது 167 கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து ரூ.198.16 கோடி நன்கொடை பெற்றுள்ளது.
ஆவணண்ங்களின்படி பகுஜன் சமாஜ் கட்சி இந்தக் காலக்கட்டத்தில் ரூ.20,000த்துக்கும் மேல் நன்கொடையாகப் பெறவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கார்ப்பரே நிறுவனங்களிடமிருந்து ஆகக்குறைந்த தொகையான ரூ.18 லட்சம் கிடைத்துள்ளது. இதனை அளித்தது 17 நிறுவனங்கள்.
பாஜக, காங்கிரஸ், தேசியவாதக் காங்கிரஸ் கட்சிகளே அதிகம் இத்தகைய நன்கொடைகளைப் பெற்றுள்ளன. அதாவது என்னமாதிரியான கார்ப்பரேட் நிறுவனங்கள் என்பதில்தான் சுவாரசியம் அடங்கியுள்ளது, பெரும்பாலும் சுரங்கத்துறை, ரியல் எஸ்டேட், மின்சாரம், செய்தித்தாள்கள் மற்றும் பிற வர்த்தக ஆர்வ நிறுவனங்கள்தான் இந்த 3 கட்சிகளுக்கும் அதிக தொகையை நன்கொடையாக அளித்துள்ளன.
மொத்தம் 14 தொழிற்துறைகளிலிருந்தும் அதிக நன்கொடையைப் பெற்றுள்ளது பாஜகதான். இதில் ரியல் எஸ்டேட் துறை சுமார் ரூ.105.20 கோடி, சுரங்கம், கட்டுமானம், ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் ரூ.83.56 கோடி, ரசாயனம் மற்றும் மருந்துற்பத்தி நிறுவனங்கள் ரூ.31.4 கோடி என்று பாஜகவுக்கு நன்கொடை வழங்கியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT