Last Updated : 29 Jul, 2017 11:28 AM

 

Published : 29 Jul 2017 11:28 AM
Last Updated : 29 Jul 2017 11:28 AM

இரவோடு இரவாக 44 குஜராத் எம்.எல்.ஏ.க்களை கர்நாடகாவுக்கு அனுப்பிய காங்கிரஸ்

குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை உதறிவிட்டு பாஜகவில் இணைந்து வருவதையடுத்து 44 எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் கட்சி இரவோடு இரவாக விமானம் மூலம் தங்கள் ஆட்சி உள்ள கர்நாடகாவுக்கு அனுப்பியுள்ளது.

“பாஜக-வின் பணபலம், ஆள்பலத்திலிருந்து காக்கும் நோக்கத்துடன் நாங்கள் எங்கள் எம்.எல்.ஏ.க்களை இடம் மாற்றியுள்ளோம்” என்று காங்கிரஸ் கட்சியின் சைலேஷ் பார்மர் தெரிவித்தார்.

இங்கு கூவாத்தூர் போல் அங்கு கர்நாடகாவில் பெங்களூரு புறநகர்ப்பகுதியில் உள்ள பிலாடியின் ஈகிள்டன் ரிசார்ட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெள்ளியிரவு கெம்பகவுடா விமானநிலையத்துக்கு இந்த எம்.எல்.ஏ.க்கள் இறங்கியவுடனேயே ரிசார்ட்டுக்கு பேருந்து மூலம் அனுப்பப்பட்டனர் என்றும் அங்கு இவர்கள் வசதியாக இருக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

கடந்த 2 நாட்களில் மட்டும் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தனர், மேலும் சிலரும் பாஜகவுக்கு தாவக்கூடுமென்ற அச்சத்தினால் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களை இடம்மாற்றியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x