Published : 15 Nov 2014 02:00 PM
Last Updated : 15 Nov 2014 02:00 PM

இந்தியாவில் கட்டுமானத் துறைக்கு தேவையான பொருட்களை விற்க ஜப்பான்-சுவிஸ் நிறுவனங்கள் கைகோர்ப்பு

சுவிஸ் தொழில்நுட்பத்தில் உருவாகும் முங்கோ பிராண்டு கட்டுமானத்துறை சாதனங்களை இந்தியாவில் விற்க அந்நிறுவனத்துடன் ஜப்பானின் ஹிட்டாச்சி கோகி இந்தியா நிறுவனம் கைகோர்த்துள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமம் 'ஃபார்ச்சூன் 500' தகுதி பெற்ற நிறுவனமாகும். இக்குழுமத்தைச் சேர்ந்த ஹிட்டாச்சி கோகி இந்தியா நிறுவனம் கட்டுமானம், இன்ஜினீயரிங், உலோகம் மற்றும் மர வேலைக்கு தேவையான தரமான பவர் டூல்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக 20 சதவீத ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதத்தைக் கண்டுவருகிறது.

அதேபோல சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த முங்கோ நிறுவனம் ரசாயனம், உலோகம், நைலான் பொருட்களை உலகத் தரத்தில் தயாரித்து வருகிறது. கட்டுமானத் துறைக்கு தேவையான கருவிகள், இன்ஜினீயர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு பயன்படும் வடிவமைப்பு சாஃப்ட்வேர்கள் ஆகியவற்றை தயாரித்து வருகிறது. இந்த சாஃப்ட்வேர் மூலம் உருவாக்கப்படும் வரைபடங்களை இரு பரிமாண மற்றும் முப்பரிமாண முறையில் எளிதாக பார்க்க முடியும்.

இவற்றை இந்தியா, நேபாளம், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் விற்பனை செய்ய ஹிட்டாச்சி கோகி - முங்கோ நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன. நாடு முழுவதும் உள்ள 350 டீலர்கள் மூலம் இப்பொருட்களை ஹிட்டாச்சி கோகி விற்பனை செய்யும்.

இவ்வாறு அந்நிறுவனங்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x