Published : 30 Jul 2017 09:05 AM
Last Updated : 30 Jul 2017 09:05 AM
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜுக்கு ரூ. 1 கோடி பரிசுத் தொகையும், ஹைதராபாத்தில் வீட்டு மனைப்பட்டாவும் வழங்கப்படும் என்று தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி யின் கேப்டன் மிதாலி ராஜ். இவரது தலைமையில் உலகக்கோப்பை விளையாட்டு போட்டிகளில் இந்தியா இறுதிப் போட்டி வரை முன்னேறி இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவியது.
இந்தப் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட மிதாலி ராஜ் நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் ஹைதராபாத் திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன்பின்னர் மிதாலி ராஜ், தனது தந்தை துரை ராஜ், தாயார் லீலா ராஜ், பயிற்சியாளர் மூர்த்தி ஆகியோருடன் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவை சந்தித்தார். அப்போது மிதாலி ராஜுக்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து முதல்வர் பாராட்டினார்.
அப்போது முதல்வர் கூறியபோது, “கோப்பையை வெல்லாவிடினும், இறுதி வரை போராடி இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததுடன், இந்த போட்டி களில் அதிக ரன்களை குவித்து நாட்டுக்கே மிதாலி பெருமை சேர்த்துள்ளார். இதனால் ஹைதரா பாத்துக்கும், தெலங்கானாவுக்கும் அவர் பெருமை தேடி தந்துள்ளார். அவர் மென்மேலும் பல சாதனைகளை புரிய வேண்டும்” என்று வாழ்த்தினார்.
மிதாலி ராஜுக்கு ரூ.1 கோடி பரிசு தொகையும், ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் வீட்டுமனைப்பட்டாவும் வழங்கப்படும். மிதாலியின் பயிற்சியாளர் மூர்த்திக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT