Published : 31 Jul 2017 09:32 AM
Last Updated : 31 Jul 2017 09:32 AM
கேரளாவில் ஆர்எஸ்எஸ் தொண் டர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, பாஜக சார்பில் நேற்று மாநிலம் தழுவிய முழு அடைப்புப் பேராட்டம் நடந்தது. இதனால் பல இடங்களில் பதற்றம் நிலவியது.
கேரள மாநிலம் திருவனந்த புரத்தில் உள்ள கார்யம் பகுதியில் நேற்று முன்தினம் ஆர்எஸ்எஸ் தொண்டர் இ.ராஜேஷ் (34) என்பவர் கொலை செய்யப்பட்டார். ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியினர்தான் இந்த கொலைக்குக் காரணம் என்று ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதை மார்க்சிஸ்ட் கட்சி மறுத்து வருகிறது.
இந்நிலையில், ராஜேஷ் கொலையைக் கண்டித்து பாஜக சார்பில் நேற்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் பதற்றம் நிலவியது.
கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் திருவனந்தபுரத்தில் பாஜக மாநில அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து கேரள பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் கூறும்போது, ‘‘கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும்’’ என்றார்.
காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறும்போது, ‘‘மாநிலத்தில் எல்லா கட்சியினரிடமும் அமைதியை ஏற்படுத்த முதல்வர் பினராயி விஜயன் உடனடியாக அமைதி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவனந்தபுரம் ஐஜி மனோஜ் ஆபிரகாம் கூறும்போது, ‘‘கொலை யில் சம்பந்தப்பட்டவர்கள் அடை யாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்’’ என்றார்.
ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு
மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆளுநர் சதாசிவம் அவசர அழைப்பு விடுத்தார். அதன்படி முதல்வர் பினராயி நேற்று காலை 11.30 மணிக்கும், மாநில டிஜிபி லோக்நாத் பெஹரா காலை 12.30 மணிக்கும் நேற்று ஆளுநரைச் சந்தித்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். அப்போது மாநிலத்தில் அமைதியை நிலை நாட்ட தேவையான நடவடிக்கை களை எடுக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து ஆளுநர் சதாசிவம் ட்விட்டரில் வெளியிட்ட தகவலில், ‘‘ஆர்எஸ்எஸ் தொண்டர் கொலை யில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளதாக முதல்வர் கூறினார். சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என அவர் உறுதியாகக் கூறினார்’’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT