Published : 04 Jul 2017 07:53 AM
Last Updated : 04 Jul 2017 07:53 AM
ஆந்திர மாநிலத்திலிருந்து சுமார் 1,000 டன்களுக்கும் மேல் செம்மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்திய வியாபாரியை சித்தூர் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
பெங்களூருவைச் சேர்ந்த பிரபல செம்மர கடத்தல் வியாபாரி நசீர் உல்லா கான் (48). 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், கடந்த 2014-ம் ஆண்டு முதல் சேஷாசலம் வனப்பகுதிகளில் செம்மரங்களை வெட்டி, துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
இவர் மீது சித்தூர் மாவட்டத்தில் மட்டும் 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக இருந்த இவரை சித்தூர் போலீஸார், வனத் துறையினர், அதிரடிப்படையினர் பல ஆண்டுகளாக தேடி வந்தனர்.
இந்நிலையில் சித்தூர் -திருப்பதி நெடுஞ்சாலையில் பெனுமூர் கூட்டு ரோடு அருகே கான் நடமாடுவதாக சித்தூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், நேற்று அந்த இடத்துக்கு சென்ற போலீஸார், நசீரை கைது செய்தனர். அவரிடமிருந்து 4 செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT