Published : 26 Nov 2014 10:31 AM
Last Updated : 26 Nov 2014 10:31 AM

உயிரை வாங்கியது பேஸ்புக் மோகம்: செல்பி எடுத்தபோது மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

பேஸ்புக்கில் போடுவதற்காக “செல்பி” புகைப்படம் எடுக்க முயன்ற 13 வயது சிறுவன் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி உயிரிழந்தான். சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பிலாஸ்பூரின் வைஷாலி நகரைச் சேர்ந்தவர் சஞ்சய் போதார். ரயில்வே துறையில் என்ஜின் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மகன் கேதான் போதார் 9-ம் வகுப்பு மாணவன்.

பேஸ்புக்கில் பெரும்பாலான நேரத்தை செலவிட்டு வந்த போதார், அதில் தனது செல்பி புகைப்படங்களை போடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். தந்தை ரயில்வேயில் பணியாற்றி வந்ததால், ரயில் என்ஜினில் இருந்தபடி பல்வேறு புகைப்படங் களை எடுத்து அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி வந்தார். அவரது இந்த படங் களுக்கு நண்பர்கள் அதிக அளவு “லைக்” போட்டனர். இதுவே கேதானுக்கு பெரும் மோகமாக மாறியது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அருகில் இருந்த ரயில் நிலையத்துக்கு சென்ற அவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலில் ஏறி பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ரயில் மீது ஏறி நின்ற கேதார் கைகளை மேலே தூக்கி போஸ் கொடுத்தார். அப்போது மேலே இருந்த உயர்மின் அழுத்த வயரில் அவரது கை உரசியது. இதையடுத்து மின்சாரம் பாய்ந்து, தூக்கி வீசப்பட்ட கேதார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

இதையடுத்து அவருடன் சென்ற சிறுவர்கள் இதுபற்றி யாரிடமும் கூறாமல் வீட்டுக்கு திரும்பிவிட்டனர். சில மணி நேரத் துக்குப் பின் கேதாரின் குடும்பத் தினர் அவனை காணாமல் தேடினர். அப்போதுதான் அவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வித்தியாசமான கோணத்தில் புகைப்படத்துக்கு ஆசைப்பட்டு, சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x