Published : 07 Nov 2014 10:17 AM
Last Updated : 07 Nov 2014 10:17 AM
அடுத்த 10 ஆண்டுகளுக்கு டெல்லி மீது மட்டுமே கவனம் செலுத்தப்படும் என்றும் இந்தத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்து பிற மாநில தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
டெல்லி சட்டசபை கலைக் கப்பட்டு மீண்டும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதன் முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாள ருமான கேஜ்ரிவால் பிடிஐக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
டெல்லியில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். இதில் எங்களுக்கு போட்டியாக பாஜக இருக்கும். அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு எனது முழு கவனமும் டெல்லி மீது மட்டுமே இருக்கும்.
கட்சி வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் நாட்டின் தலைநகரில் வலுவான அடித்தளம் இருக்க வேண்டும். டெல்லியின் தேர்தல் முடிவைப் பொறுத்து பிற மாநிலங்களில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்.
ஆளுமைத்திறன் இல்லாதவர் என என் மீது முத்திரை குத்தப் படுகிறது. இதை நான் நிராகரிக்கிறேன். கடந்த 65 ஆண்டுகளாக பாஜக பல்வேறு மாநிலங்களில் ஆட்சி செய் திருக்கிறது.
இதில் ஊழல் இல்லாத ஒரு மாநிலத்தைக் குறிப்பிட முடியுமா? காங்கிரஸும் மத்தி யிலும் பல்வேறு மாநிலங்களி லிலும் 65 ஆண்டுகளாக ஆட்சி புரிந்தது. ஆனால் ஊழலை ஒழிக்கமுடியவில்லை. ஆனால் 49 நாளில் ஊழலை ஒழித்தோம். எனவே எங்களுக்கு ஆளுமைத் திறன் உள்ளது.
டெல்லிக்காக பாஜகவும் காங்கிரஸும் ஒன்றும் செய்ய வில்லை. விலைவாசியை கட்டுப் படுத்தவில்லை. ஆனால் நாங்கள் விலைவாசியை கட்டுப்படுத்தி உள்ளோம்.
மக்களவைத் தேர் தலின்போது ஊழலை ஒழிப்பதாக மோடி உறுதி அளித்தார். பொறுப் பேற்று 200 நாட்களாகியும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை. ஆனால் மோடி வாக்குறுதியை நிறைவேற்றுவார் என மக்கள் இன்னமும் நம்பிக் கையுடன் உள்ளனர்.
டெல்லியில் நடக்கப்போகும் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் நாங்கள் டெல்லியில் ஆட்சியைப் பிடிப் போம். இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT