Published : 10 Jul 2017 08:51 AM
Last Updated : 10 Jul 2017 08:51 AM
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, எருது களை வாங்க பணமில்லாத காரணத்தால் தனது மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேஹோர் மாவட்டம், பசந்த்புர் பங்கிரி கிராமத்தைச் சேர்ந்தவர் சர்தார் காலா. விவசாயியான இவருக்கு ராதிகா (14), குந்தி (11) என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சர்தார், எருதுகளுக்கு பதில் தனது இரு மகள்களையும் ஏரில் பூட்டி நிலத்தை உழுதுள்ளார். இது தொடர்பான படம் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து சர்தார் கூறும் போது, “வறுமை காரணமாக எனது மகள்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டனர். மேலும் நிலத்தை உழுவதற்கான எருதுகளை வாங்கவும் அவற்றை பராமரிக்கவும் எனக்கு பண வசதி இல்லை. அதனால் வேறு வழியின்றி ஏரில் எனது மகள்களையே பூட்டி நிலத்தை உழுதேன்” என்றார்.
இதனிடையே, இதுகுறித்து மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஆஷிஷ் சர்மா கூறும்போது, “சிறுவர்களை ஏர் உழும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என அந்த விவசாயியிடம் அறிவுறுத்தி உள்ளோம். மேலும், அரசு திட்டங்களின் கீழ் அந்த விவசாயிக்கு தேவையான உதவி கள் செய்யப்படும்” என்றார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் வறுமை காரணமாக பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதனிடையே, பயிர் கடன்களை ரத்து செய்யக் கோரியும் வேளாண் விளைபொருட் களுக்கு நியாய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் விவசாயிகள் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக மாண்ட்சர் மாவட் டத்தில் போராட்டம் தீவிரமடைந் தது. இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 6 விவசாயிகள் பலியாயினர். இதையடுத்து அந்த மாவட்டத் தில் 144 தடை உத்தரவு பிறப் பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT