Published : 06 Jul 2017 10:03 AM
Last Updated : 06 Jul 2017 10:03 AM
“போருக்கு தூண்டினால் கடந்த 1962-ம் ஆண்டில் ஏற்பட்டதை விட இப்போது இந்தியாவுக்கு அதிக பாதிப்பு ஏற்படும்” என்று சீன ஊடகம் மிரட்டல் பாணியில் தெரிவித்துள்ளது.
சிக்கிம் எல்லையில் உள்ள டாங்லாங் பகுதியில் சீனா சாலை அமைக்க முயற்சித்தது. இதை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்தனர். அத்துடன், தனது பகுதியை ஆக்கிரமித்து சாலை அமைக்க சீனா முயற்சிக்கிறது என்று பூடானும் குற்றம் சாட்டி யுள்ளது. இதையடுத்து சிக்கிம் எல்லையில் சீனா தனது ராணு வத்தைக் குவித்தது. பதிலுக்கு இந்தியாவும் 3000-க்கும் மேற் பட்ட வீரர்களை எல்லையில் குவித்துள்ளது.
கடந்த 3 வாரங்களாக சிக்கிமின் டாங்லாங் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் சீனா அரசின் ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகை நேற்று தனது தலையங் கத்தில் கூறியிருப்பதாவது:
இன்றைய சூழ்நிலையில் போர் வெடித்தால், கடந்த 1962-ம் ஆண்டை விட இந்தியாவுக்கு பேரிழப்பு ஏற்படும். இந்தியாவுக்கு கசப்பான பாடத்தைக் கற்றுத்தர வேண்டும். இந்தியாவின் ஆத்திர மூட்டும் செயல்களால் சீன மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
எல்லைப் பிரச்சினையில் பூடா னையும் தொடர்புப்படுத்த இந்தியா முயற்சிக்கிறது. அத்துடன் சர்வதேச நாடுகள் மத்தியில் நாடக மாடுகிறது. இந்திய அமைச்சர் ஜேட்லி சொல்வது உண்மைதான். 1962-ம் ஆண்டு இருந்த இந்தியாவை விட இப்போது இருக்கும் இந்தியா வேறுதான். அதேசமயம், அப்போது ஏற்பட்ட இழப்பை விட இந்தியாவுக்கு இப்போது அதிக இழப்பு ஏற்படும்.
இவ்வாறு குளோபல் டைம்ஸ் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
எல்லையில் பதற்றம் ஏற்பட்டபோது, “கடந்த 1962-ம் ஆண்டு போரில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று சீனா கூறியது. அதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி பதில் அளிக்கையில், “கடந்த 1962-ம் ஆண்டு இருந்த இந்தியா வேறு; இப்போது இருக்கும் இந்தியா வேறு” என்று கடுமையாகக் கூறினார்.
மேலும், இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் சமீபத்தில் போருக்குத் தயார் என்று துணிச்சலாக கூறினார். சீனா, பாகிஸ்தான் மற்றும் உள்நாட்டு சண்டைகளைச் சந்திக்க தயார் என்று ராவத் குறிப்பிட்டார். இதனால் சீன ஊடகங்கள் இந்தியாவை மிரட்டும் வகையில் எழுதி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT