Published : 05 Dec 2013 01:23 PM
Last Updated : 05 Dec 2013 01:23 PM
தெலங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான மத்திய அமைச்சர்கள் குழு தயாரித்துள்ள வரைவு அறிக்கையில், ஆந்திரம் மாநிலத்தின் ராயலசீமா பகுதியில் உள்ள 2 மாவட்டங்களை புதிதாக அமைக்கப்படவுள்ள தெலங்கானாவுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, தெலங்கானா பகுதியில் இன்று பந்த் நடைபெறுகிறது.
தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி அழைப்பு விடுத்துள்ள இந்த பந்துக்கு தெலங்கானா கூட்டு நடவடிக்கைக் குழு, பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன ஆதரவு அளித்துள்ளன.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு: பந்த்துக்கு ஆந்திரப் பிரதேசம் அரசுப் போக்குவரத்துக் கழகமும் ஆதரவு அளித்துள்ளதால் போக்குவரத்து வெகுவாக முடங்கியுள்ளது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
மேடக், கரிம்நகர், நிஜாமாபாத், அடிலாபாத், நல்கொண்டா, மஹபூப் நகர், வாராங்கல் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பந்த் காரணமாக அரசுக்கு சொந்தமான சிங்கானேரி நிலக்கரி மையத்தில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ராயலசீமாவில் இருந்து 2 மாவட்டங்களைப் பிரித்து ராயல-தெலங்கானா அமைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்.
மாறாக, காங்கிரஸ் காரியக் கமிட்டியும், மத்திய அமைச்சரவையும் ஏற்கெனவே முடிவு செய்தது போல் 10 மாவட்டங்கள் உள்ளடக்கிய தனித் தெலங்கானா அமைக்க வேண்டும் என தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கோரிக்கை விடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT