Published : 02 Dec 2013 06:36 PM
Last Updated : 02 Dec 2013 06:36 PM

உணவுப் பாதுகாப்பு மீது சமரசத்துக்கு இடமில்லை: ஆனந்த் சர்மா

உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாய நலன் சார்ந்த விஷயங்களில் இந்தியா எவ்வித சமரசமும் செய்துகொள்ளாது என்று மத்திய தொழில் வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தற்காலிகமாக முன்வைக்கப்பட்டுள்ள தீர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

உலக வர்த்தக அமைப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தோனேசியாவின் பாலிக்கு வந்துள்ள ஆனந்த் சர்மா, ஜி-33 அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள வளரும் நாடுகள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார்.

பின்னர் அவர் கூறும்போது, "விவசாய நலன் தொடர்பான விஷயத்தில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ள மாட்டோம்.

பணக்கார நாடுகளின் வர்த்தக ஆசைகளுக்கு அடிபணிய மாட்டோம். இந்த விஷயத்தை பொறுத்தவரை இந்தியாவில் அரசியல் ரீதியாக ஒற்றுமையும், அனைத்து தரப்பினரிடையே ஒரே கருத்தும் உள்ளது.

எனவே, உணவுப் பாதுகாப்பு தொடர்பாக முன்வைக்கப்படும் தற்காலிகத் தீர்வை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. பாலி கூட்டத்தில் வளரும் நாடுகள் அனைத்தும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும்" என்றார் ஆனந்த் சர்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x