Published : 03 Feb 2014 08:37 AM
Last Updated : 03 Feb 2014 08:37 AM
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பிரச்சினைக்கு 10 நாள்களில் தீர்வு காணப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்கிறது. இப்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால் காங்கிரஸ் தரப்பில் வேண்டுமென்றே காலதாம தம் செய்யப்படுவதாகக் கூறப்படுகி றது. இதுகுறித்து தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் கூறியபோது, இனிமேலும் பொறுமை காக்க முடியாது, தொகுதிப் பங்கீடு தொடர்பாக 3 நாள்களுக்குள் காங்கிரஸ் பதில் அளிக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளார்.
இதனால் இரு கட்சிகளிடை யேயும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இந்த விவகாரத்தில் சமரசம் செய்யும்வகையில் தேசியவாத கட்சியின் தலைவர் சரத் பவார் சமூக வலைத்தளமான ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பான காங்கிரஸுடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாள்களில் தீர்வு எட்டப்படும். காங்கிரஸுக்கு நாங்கள் கெடு எதுவும் விதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் 48 மக்கள வைத் தொகுதிகள் உள்ளன. இதில் எந்தெந்த தொகுதிகளை தங்களுக்குப் பெறுவது என்பதில் காங்கிரஸுக்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
இதனிடையே குஜராத் முதல் வர் நரேந்திர மோடியை, சரத் பவார் ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இதனை அவரது கட்சி திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT