Published : 19 Mar 2014 10:03 AM
Last Updated : 19 Mar 2014 10:03 AM
கேரள மாநிலத்தில் மத்திய உணவுத்துறை இணையமைச்சர் கே.வி. தாமஸ், வீரேந்திர குமார் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அங்கு ஏப்ரல் 10ம் தேதி மக்களவைத் தேர்தல் நடை பெறவுள்ளது. எர்ணாகுளம் தொகுதியில் கே.வி.தாமஸ் போட்டியிடுகிறார். கே.வி.தாமஸை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.என்.ராதாகிருஷ்ணனும் மனு தாக்கல் செய்தார்.
கேரளத்தில் காங்கிரஸ் கூட்ட ணியில் உள்ள ஜனநாயக சோஷ லிஸ்ட் ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் வீரேந்திர குமார் பாலக் காடு தொகுதியில் மனு தாக்கல் செய்தார். வீரேந்திர குமார், பிரபல மலையாள நாளிதழான மாத்ரு பூமியின் மேலாண்மை இயக்குநர் ஆவார். மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் கொடிக்குன்னில் சுரேஷ், மாவே லிக்கரை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
மாநில நிதியமைச்சரும், கேரளா காங்கிரஸ் (எம்) கட்சித் தலைவருமான கே.எம்.மாணியின் மகன் ஜோஸ் கே.மாணி கோட்டயம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணியில் இருந்து பிரிந்து ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் சமீபத்தில் இணைந்த புரட்சிகர சோஷலிச கட்சியின் என்.கே. பிரேமச்சந்திரன், கொல்லம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT