Published : 16 Oct 2013 08:17 AM
Last Updated : 16 Oct 2013 08:17 AM
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
கடந்த 2003- ஆம் ஆண்டு, இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறவில்லை என்று பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகள் இயக்குனர் ஜெனரல் தெரிவித்த ஒரு சில மணி நேரங்களிலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று காலை முதலே துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வந்தது. இந்த தாக்குதலுக்கு இந்திய தரப்பிலும் இருந்தும் தக்க பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.
பல மணி நேரம் சண்டை நீடித்தது. இதில், மேந்தார் பகுதியில் தேக்ரி நிலையில் பணியில் இருந்த முகமது சரோஸ்கான் (31) என்ற வீரர் கொல்லப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT