Published : 01 Apr 2017 07:00 PM
Last Updated : 01 Apr 2017 07:00 PM
அரசியல்வாதிகளாக நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கையெழுத்திடுகின்றனர், ஆனால் அவர்களே தங்கள் வணிக நலன்கள் சார்ந்த வழக்குகளில் தனியார்களுக்காக வழக்கறிஞர்களாக ஆஜராகின்றனர், இது முரண்பட்ட இரட்டை நலன்களால் அடையும் பயன், எனவே இதனைத் தடை செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
இந்த மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “ஐஏஎஸ் அதிகாரிகளாக சில டாக்டர்கள் மாறுகின்றனர், பொறியாளார்கள் சிலர் தூதர்களாகின்றனர். எனவே மக்களவை உறுப்பினர்கள் பிற தொழில்களில் ஈடுபடுவதைத் தடை செய்ய கோரும் இந்த மனுவை ஏற்க முடியாது” என்று கூறி தள்ளுபடி செய்தார்.
அஸ்வினி உபாத்யாய் வாதிடும் போது, “இது மிகவும் கவனிக்கத்தக்க லாப நோக்கிலான இரட்டை நலன் விவகாரமாகும், சில அரசியல்வாதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக் கையெழுத்திடுகின்றனர், பிறகு தங்கள் வணிக நலன்கள் சார்ந்த தனியார் நிறுவனங்கள் சார்பாக வழக்கறிஞர்களாக வாதிடுகின்றனர். இது இரட்டை நலன் இல்லையா? எம்.பி.க்களாக சம்பளம் வாங்குகின்றனர். பிறகு ஏன் வழக்கறிஞர்களாக வாதாட இங்கு வரவேண்டும்” என்றார்.
இதற்கு நீதிபதி, “உங்கள் வாதம் கொள்கை அளவில் சரியானதாகவே தோன்றுகிறது, ஆனால் நாங்கள் எப்படி கொள்கை வகுக்க முடியும், இதற்கான சட்டம் இருக்கிறதென்றால் நாங்கள் ஆதரிக்கலாம்” என்றார்.
வழக்கறிஞர் உபாத்யாய் மனுவில் கூறியிருப்பதாவது:
அரசு ஊழியர்கள், நீதிபதிகள் ஆகியோருக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் உண்டு. வழக்கறிஞர்களாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் வழக்கறிஞர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் அரசியல் சாசனச் சட்டம் ரீதியாக அவர்களுக்கு இருக்கும் கடமைகள், தனியார் நலன்களைக் காக்க பயன்படுகிறது. இதனால் முரண்பட்ட இரட்டை நலன்கள் ஏற்படுகின்றன.
நாம் இதற்குத் தடை விதிக்காவிட்டால் ஊழலை ஒழிக்க முடியாது. பல எம்.பி.க்கள் சட்டத்தை மீறும் பல கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன் சார்ந்து வாதாட நீதிமன்றத்தில் ஆஜராகின்றனர் இது அறமற்ற செயல் என்பதோடு நீதிக்குப் புறம்பானது மேலும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா விதிமுறை 49-ஐ மீறுவதுமாகும்.
543 லோக்சபா எம்.பி.க்கள் 130 கோடி மக்களின் பிரதிநிதிகள், ஒரு எம்.பி. சராசரியாக 2.25 மில்லியன் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். அதே போல் மாநிலங்களவை எம்.பி. என்பவர் அவர் சார்ந்த மாநிலங்களின் நலன்களுக்கு குரல் கொடுப்பவர், எனவே கூட்டாட்சி அரசியல் அமைப்பில் இவர்களுக்கு பொறுப்பான வேலைகள் உள்ளன. ஒரு எம்.பி.யின் பிரதான் வேலை அவரது அதற்குரிய செயல்பாடுகளே.
எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு தினமும் வருகை தந்து முழு நேரமும் மக்கள் நலன்களுக்காகவே அர்ப்பணிப்பு செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்த இந்த மனுவைத்தான் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT