Last Updated : 23 Feb, 2014 12:00 AM

 

Published : 23 Feb 2014 12:00 AM
Last Updated : 23 Feb 2014 12:00 AM

சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் 25 முதல் வேலைநிறுத்தம்: அகில இந்திய கூட்டமைப்பு தகவல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25 முதல் அகில இந்திய அளவில் காலவரை யற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவ தாக சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களின் இருபெரும் கூட்டமைப்புகளின் நிர்வாகிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து அகில இந்திய சமையல் எரிவாயு விநியோகஸ் தர்கள் கூட்டமைப்பின் (ஏ.ஐ.எல்டி.எப்.) தலைவர் பி.என்.சேத், பொதுச் செயலாளர் சந்திரபிரகாஷ் மற்றும் சமையல் எரிவாயு இந்திய கூட்டமைப்பின் (எல்.டி.எப்.ஐ.) பொதுச்செயலாளர் பவண் சோனி ஆகியோர் கூறியதாவது:

ஒரே வகையான எரிவாயுவிற்கு மானியம், மானியம் அல்லாத மற்றும் வர்த்தக சிலிண்டர்கள் என மூன்று விலைகளில் எரிவாயு தரப்படுவதை நிறுத்த வேண்டும். ஏனெனில், இவற்றை சில வாடிக்கையாளர்கள் தவறாகப் பயன்படுத்துவதால், தவறு செய் யாத விநியோகஸ்தர்கள் மீது குற்றச்சாட்டு எழுகிறது.

அரசு குடோன்களில் இருந்து சிலிண்டர்களை வாங்குவது முதல் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பது வரை ஒவ்வொரு முறையும் அதன் எடைகளை சோதனை செய்ய வேண்டி உள்ளது. எனவே, வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகை யில் முறையாக சீல் வைக்கப்பட்ட சிலிண்டர்களை வழங்க வேண்டும்.

ஏற்கெனவே நடைமுறையில் இருந்த எம்டிஜி (மார்கெட்டிங் விநியோகஸ்தர் வழிமுறைகள்) 2011-க்கு பதிலாக, பிப்ரவரி 21 முதல் புதிதாக அமல்படுத்தி யுள்ள எம்டிஜி 2014-ல் எங்கள் கோரிக்கைகள் எதுவும் இணைக்கப்படவில்லை.

இதில் எரிவாயு தயாரிக்கும் நிறுவனம் முதல் அதை வாடிக்கையாளருக்கு விநியோகிக்கும் ‘டெலிவரி பாய்’ வரை முறைப்படுத்தும் திட்டங்கள் இல்லை. ஏற்கெனவே நுகர்வோர் சட்டங்கள் இருக்கும்போது இதை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

மருத்துவமனை போன்ற அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு வேலைநிறுத்தத்தால் பாதிப்பு இருக்காது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x