Published : 27 Sep 2016 01:55 PM
Last Updated : 27 Sep 2016 01:55 PM
டெல்லியில் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட லஞ்சம் வாங்கியதாக புகாரில் சிக்கிய அதிகாரி, அவரது மகனுடன் தற்கொலை செய்து கொண்டார். செவ்வாய்க்கிழமை காலை இருவரது உடலும் வீட்டின் வெவ்வேறு அறைகளில் இருந்து மீட்கப்பட்டது.
இவரது மனைவியும், மகளும் கடந்த ஜூலை மாதம் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாரியின் தற்கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, "டெல்லியில் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட லஞ்சம் வாங்கியதாக பி.கே. பன்சால் மீது புகார் எழுந்தது. இவர் மத்திய அரசின் நிறுவனங்கள் விவகாரத் துறையின் பொது இயக்குநராக பணியாற்றிவந்தார்.
கடந்த ஜூலை மாதம் இவர் ரூ.9 லட்சம் லஞ்சம் வாங்கியதாக இவர் மீது புகார் எழுந்தது. டெல்லியில் ஒரு நட்சத்திர விடுதியில் பணம் கைமாறியது.
இந்நிலையில், பன்சால் லஞ்சப் புகாரில் சிக்கியதால் மனமுடைந்த அவரது மனைவி சத்யபாலா (59), மகள் நேகா (27) ஆகியோர் டெல்லியில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து தற்போது, பி.கே. பன்சால் மற்றும் அவரின் மகன் யோகேஷ் ஆகிய இருவரும் டெல்லியில் உள்ள தங்களது மது விஹார் பிளாட்டில் தனித்தனி அறையில் தற்கொலை செய்து கொண்டனர்.
இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT