Published : 31 Jan 2014 10:11 AM
Last Updated : 31 Jan 2014 10:11 AM
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்களின் பெயர் களை வெளியிட வலியுறுத்தி, டெல்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன் சீக்கியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1984ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டபோது, டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த திங்கள்கிழமை அளித்த பேட்டியில், “சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் சில காங்கிரஸார் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது” என்றார்.
இந்நிலையில் டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன் வியாழக்கிழமை சுமார் 500 சீக்கியர்கள் குவிந்தனர். பஞ்சாபில் ஆளும் கட்சியான சிரோமணி அகாலி தளம், டெல்லி சீக்கிய குருத்துவாரா கமிட்டி உறுப்பினர்களான இவர்கள், சோனியா மற்றும் ராகுலுக்கு எதிராக கோஷமிட்டனர்.
ராகுல் காந்தியிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரும் பதாகைகளையும் கருப்புக் கொடிகளையும் அவர்கள் கைகளிில் ஏந்தியிருந்தனர்.
போராட்டக்காரர்கள் கூறுகையில், “கடந்த 30 ஆண்டுகளாக சீக்கியர் கலவரம் குறித்து காங்கிரஸ் பேசிக் கொண்டிருக்கிறதே தவிர இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கலவரத்தில் காங்கிரஸார் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என்று கூறும் ராகுல், அவர்களின் பெயர்களை வெளியிடவேண்டும்” என்றனர்.
மேலும் அவர்கள், “1984 கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேர்ஜிவால், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது ஏன்?” எனவும் கேள்வி எழுப்பினர்.
காங்கிரஸ் வருத்தம்
இதனிடையே 84ல் சீக்கியர்க ளுக்கு எதிரான கலவரத்துக்கு காங்கிரஸ் வருத்தம் தெரிவித்துள்ளது. “இந்தக் கலவரம் துரதிருஷ்ட வசமானது. இது மிகுந்த துயரம் தருகிறது.
நாடாளுமன்றத்திலும், வெளியிலும் பிரதமர் மன்மோகன் சிங் பலமுறை மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்” என்று தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி கூறியுள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய சீக்கியர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT