Last Updated : 05 Jul, 2016 05:03 PM

 

Published : 05 Jul 2016 05:03 PM
Last Updated : 05 Jul 2016 05:03 PM

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் ஒரு தேர்தல் நாடகமே: மாயாவதி தாக்கு

பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளது பற்றி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடுமையாக சாடியுள்ளார்.

அதாவது இது உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் மாநில தேர்தல்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ள அரசியல் நாடக அரங்கேற்றமே என்று மாயாவதி சாடியுள்ளார்.

“இந்த 2 ஆண்டுகால ஆட்சியில் பாஜக அரசு பெரிய கார்ப்பரேட்களுக்கு சாதகமாகவே செயல்பட்டுள்ளது. ஏழைகளையும், விவசாயிகளையும், தலித்துகளையும், முஸ்லிம் மற்றும் பிற சிறுபான்மை பிரிவினர் மற்றும் மக்கள் நலன்களை புறக்கணித்தே அரசியல் செய்து வருகிறது.

பிரதமர் மோடியின் கவனமும் இன்னமும் இவர்கள் பக்கம் திரும்பவில்லை. நலிந்தோர் பிரிவிலிருந்து 2 அல்லது 3 அமைச்சர்களை நியமித்து விட்டால் அது இந்த சமுதாயத்தினரின் வாழ்வாதார, சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுத்து விடாது.

தங்கள் ஆட்சியின் கார்ப்பரேட் சாதகப் போக்குகளை மறைக்கவே இந்நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது” என்று சாடினார் மாயாவதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x