Published : 18 Feb 2014 09:21 AM
Last Updated : 18 Feb 2014 09:21 AM
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.
டி.ராஜா
இது தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் சில விஷயங்களை அவர்கள் நியாயப்படுத்தவேண்டியுள்ளது. சிலவற்றை அவர்கள் பெரிதாக்கி காட்டவேண்டியுள்ளது. உணவு மற்றும் உர மானியம் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்துள்ளது.
தேர்தலுக்குப் பிறகு அமையும் எந்த அரசுக்கும் இதுவொரு சவாலாக இருக்கும்.
வலுவான பொருளாதாரத்தை ப.சிதம்பரம் விட்டுச் செல்லவில்லை. அவரது உரையின் இறுதியில் தேர்தல் கால அறிவிப்புகள் சில இருந்தாலும் மக்கள் புத்திசாலிகள். நாட்டின் பொருளாதார நிலையை அவர்கள் புரிந்துகொள்வார்கள். நாவன்மையால் அவர்களை ஏமாற்ற முடியாது.
சீதாராம் யெச்சூரி
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுவரும் கடினமானப் பணியை அடுத்துவரும் நிதியமைச்சரிடம் ப.சிதம்பரம் விட்டுச் செல்கிறார்.
அரசின் தாராளமயமாக்கல் கொள்கைகளால் பொருளாதார வளர்ச்சி தடைபட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம் சந்திக்கும் பிரச்சினைகள் மேலும் சிக்கலாகும் வாய்ப்புள்ளது.
2012 டிசம்பரில் வரி நிலுவை ரூ. 4.82 லட்சம் கோடியாக இருந்தது. இது 2013 டிசம்பரில் ரூ. 5.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இத்தொகை வசூலிக்கப்பட் டிருந்தால் அடிப்படை கட்ட மைப்பு வசதிகளை அதிக அளவில் ஏற்படுத்தியிருக்கலாம். வேலைவாய்ப்புகளை உருவாக் கியிருக்கலாம். இதன் மூலம் வருமானம் அதிகரித்து தேவையும் அதிகரித்திருக்கும். இதனால் உற்பத்தி துறை மற்றும் பொருளா தார நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும்.
மம்தா பானர்ஜி
இந்த பட்ஜெட் தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றும் நோக்கமாகக் கொண்டது. இதன் மூலம் சிலரை ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் ஏமாற்ற முடியாது. இந்த பட்ஜெட்டை அவர்களால் செயல்படுத்த முடியாது. வரும் 4 மாத செலவினங்களுக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி பெறுவதே இதன் நோக்கம்.
மாயாவதி
இந்த பட்ஜெட்டில் புதிதாக எதுவும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் தாங்கள் செய்து முடித்தவற்றை அதில் பட்டியலிட்டுள்ளனர். தேர்தல் கால பட்ஜெட்டை அளிக்க முயன்றுள்ளனர். என்றாலும் இது மக்களுக்கு பலனளிக்கப் போவதில்லை. மத்திய வருவாய் பிரிவினருக்கு இந்த பட்ஜெட் சாதகமாகத் தோன்றினாலும் அவர்கள் இதனால் பலனடையப் போவதில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT