Published : 17 Dec 2013 05:09 PM
Last Updated : 17 Dec 2013 05:09 PM

மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வி அடையும்: அத்வானி

சமீபத்தில் நடந்துமுடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது போல், மக்களவைத் தேர்லிலும் இரு இலக்கங்களுடன் தோல்வி அடையும் என்று பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

டெல்லி, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது.

இதுகுறித்து அத்வானி அவரது வலைப்பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:

"சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாக்காளர்களை விலைக்கு வாங்க முயன்றது. குறிப்பாக, ராஜஸ்தான் தேர்தலுக்கு முன் வாக்காளர்களைக் கவர பல திட்டங்கள் போடப்பட்டன. ஆனால், அவரசநிலை காலகட்டத்திற்கு பின், சட்டமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு ஏற்பட்ட மிக மோசமான தோல்வி இதுவே ஆகும்.

வரும் 2014 மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி இரு இலக்கங்களில் வாக்குகள் பெற்றால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று என் முந்தைய வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்." என்று கூறியுள்ளார்.

முக்கியமான சட்டமன்ற தேர்தல் நடந்துமுடிந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தல் சோனியா காந்தி-மன்மோகன் சிங் அரசின் தலைவிதி தீர்மானிப்பதில் அதிமுக்கிய பங்கு வகிக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் அவரசநிலை காலகட்டத்திற்கு பின் நடந்த தேர்தலைப்போலவேதான், நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலிலும் காங்கிரஸின் தோல்வியை சந்திக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய முற்போக்கு அரசின் ஊழல், மோசடி மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் கருப்பு பணங்களைத் திரும்ப கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி, அத்வானி 2011-ஆம் ஆண்டு ஜன சேத்னா யாத்திரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x