Published : 03 Mar 2014 08:00 AM
Last Updated : 03 Mar 2014 08:00 AM

பிம்ஸ்டெக் மாநாடு: பிரதமர் இன்று மியான்மர் பயணம்

பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் திங்கள்கிழமை மியான்மர் செல்கிறார்.

இந்தியா, வங்கதேசம், இலங்கை, தாய்லாந்து, மியான்மர், பூடான், நேபாளம் ஆகிய 7 நாடுகள் அடங்கிய பிம்ஸ்டெக் அமைப்பின் 4 நாள் மாநாடு மியான்மர் தலைநகர் நைப்பியிதோவில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் இருந்து திங்கள்கிழமை மியான்மருக்கு செல்கிறார். மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.-பி.டி.ஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x