Published : 28 Mar 2014 03:37 PM
Last Updated : 28 Mar 2014 03:37 PM
டெல்லி மாணவி வழக்கில் இளங்குற்றவாளிக்கு எதிரான வழக்கை, வழக்கமான நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்ற மாணவியின் பெற்றோர் தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு இளங்குற்றவாளிகளுக்கான வயது வரம்பு மறுநிர்ணயம் தொடர்பாக பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமி தொடர்ந்த வழக்கையும், டெல்லி மாணவி பெற்றோர் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்தது.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்த கும்பல் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த அவர் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அவர் இறந்தார். பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இதற்கு பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் இளம் குற்றவாளி மீதான வழக்குகள் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வருவதால், சிறார் நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதை தடைசெய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இளம் குற்றவாளி மீதான வழக்கை, வழக்கமான கோர்ட்டில் விசாரிக்க முடியாது என கூறி மருத்துவ மாணவியின் பெற்றோரின் கோரிக்கை மனுவை நிராகரித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment