Published : 06 Feb 2014 12:08 PM
Last Updated : 06 Feb 2014 12:08 PM

இனவெறி தாக்குதலை தடுக்க மத்திய அரசு குழு அமைப்பு

வடகிழக்கு மாநிலத்தவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை வகுக்க 6 பேர் கொண்ட குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த குழுவுக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பேஸ்பரூவா தலைமை வகிப்பார் என்றும், 2 மாத காலத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக இன்று காலை, வடகிழக்கு மாநிலத்தவர் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவுடன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர் மரணம்:

டெல்லியில் இனவெறி தாக்குதலில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் பலியானார்.

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. நிடோ பவித்ரா-வின் மகன் நிடோ டானியம் தெற்கு டெல்லியில் நேற்று ஒரு கும்பால் தாக்கப்பட்டார். அவர் மீது நடத்தப்பட்டது இனவெறி தாக்குதல் என்று கூறப்படுகிறது.

பாஜக எதிர்ப்பு:

இந்நிலையில், பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் டெல்லியில் அருணாச்சல் மாணவர் பலியான சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தன.

புதன் கிழமை நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினை எதிரொலித்தது. மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஸ், அவையில் பேசிய போது, வடகிழக்கு மாநிலமும் இந்தியாவில் தான் இருக்கிறது. சொந்த நாட்டுக்குள்ளேயே இனவெறி தாக்குதல் கண்டனத்துக்குரியது என கூறியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x