Published : 27 Jul 2016 10:37 AM
Last Updated : 27 Jul 2016 10:37 AM
நம் நாட்டில் சிற்பக் கலையை பயிற்றுவிக்கும் அரசுக் கல்லூரி மகாபலிபுரத்தில் மட்டுமே உள்ளது. இதற்கு அடுத்தபடியாக திருப்பதி நகரில் தேவஸ்தானம் சார்பில் சிற்பக் கலைக் கல்லூரி அமைக்கப்பட்டு, இங்கு இலவசமாக சிற்பம், ஓவியம், ஐம்பொன் சிலைகள் தயாரிக்கும் கலைகள் கற்றுத் தரப்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் படித்து வெளியே வந்த பலர் திரையுலகில் புகழ் பெற்று விளங்குகின்றனர். மேலும் பலர் வெளியில் தனியாக கோயில்களுக்கு சிலை வடித்து தருகின்றனர்.
இதுபோன்று திருப்பதி சிற்பக் கலைக் கல்லூரியில் படித்த பிரசாத் என்பவர் திருப்பதி ‘பொம்மல குவாட்டர்ஸ்’ பகுதியில் சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார். இதில் குறிப்பாக காஞ்சிபுரம், மகாபலிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்து இங்கு சிற்பக் கலைகளில் திறம்பட ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு தற்போது 24 அடி உயர ஏழுமலையான் சிலை அழகிய வடிவில் தயாராகி வருகிறது. இப்பணியில் சுமார் 30 தமிழ் சிற்பிகள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். ‘சங்கர்ஷண மூர்த்தி’ வடிவில் இந்த சிலையை உருவாகி வருகிறது. 40 டன் எடையுள்ள இந்த சிலை டெல்லியில் உள்ள பிருந்தாவன் கோயிலுக்காக தயாரித்து வருகின்றனர். இந்தப் பணி கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT