Published : 22 Feb 2014 05:18 PM
Last Updated : 22 Feb 2014 05:18 PM
மும்பை புறநகர் பகுதியான் அந்தேரியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
25 பேர் கொண்ட கும்பல் நடத்திய தாக்குதலுக்கு பின்னணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
தாக்குதல் குறித்து ஆம் ஆத்மி தொண்டர் பரிதோஷ் கூறுகையில், "ஆம் ஆத்மி அலுவலகத்துக்குள் திடீரென நுழைந்த கும்பல் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியதோடு கேஜ்ரிவால் போஸ்ட்ரையும் எரித்தது" என்றார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர், ஆம் ஆத்மி தலைவர் அஞ்சலி தமானியா மகாரஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரை கடுமையாக விமர்சித்திருந்தார். மாநில மின்வாரிய ஊழல் காரணமாக மும்பைவாசிகள் கூடுதல் மின் கட்டணம் செலுத்த வேண்டி இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT