Published : 27 Mar 2014 04:57 PM
Last Updated : 27 Mar 2014 04:57 PM

இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தர மறுக்கிறது சுவிட்சர்லாந்து: ப.சிதம்பரம்

சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள பணம் பற்றிய கணக்கு விவரங்களை அந்த நாடு இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதில்லை என நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா கோரும் தகவல்களை கொடுக்க சுவிட்சர்லாந்து தொடர் ந்து மறுப்பதால் பன்னாட்டு அமைப்புகளான ஜி-20 போன்ற வற்றிடம் புகார் செய்ய இருப்பதாகவும் சிதம்பரம் எச்சரித் திருக்கிறார்.

இது தொடர்பாக மார்ச் 13-ம் தேதி இரு பக்க கடிதத்தை சுவிட்சர்லாந்து நிதி அமைச்சர் எவலின் விடர் ஷ்லம்புக்கு எழுதி யுள்ளார் சிதம்பரம்.

வங்கி ரகசியம் என்பது இனி இருக்கக்கூடாது என 2009 ஏப்ரலில் நடந்த ஜி20 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனத்தை இந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். கடிதத்தில் அவர் கூறியிருக்கும் விவரம் வருமாறு:

இந்தியாவுக்கு ஒத்துழைக்க முன்வராமல் மறுப்பது தொடர்ந்தால் ‘சுவிட்சர்லாந்து ஒத்துழைக்கத் தயாராக இல்லை’ என வெளிப்படையாக இந்தியா அறிவிக்கும். வேறு வழிகள் என்ன உள்ளன என்பதையும் பரிசீலிப்போம். இந்தியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையே யான இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்த விதிமுறை களை சுவிட்சர்லாந்து பின்பற்று வதில்லை. இந்த ஒப்பந்த விதிகளின்படி, சுவிஸ் வங்கிகளில் கணக்கு தொடங்கி பணம் இருப்பு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை வருமான வரி அதிகாரிகள் கோர முடியும்.

வங்கி கணக்குகள் ரகசிய மானவை என்பதை சுவிட்சர் லாந்து இன்னும் நம்புவதாகவே தெரிகிறது. வங்கிக் கணக்கு விவரங்களை தரும்படி இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் கோரிக் கை வைத்தாலும் அதை சுவிட்சர் லாந்து ஏற்பதில்லை.

இரட்டைவரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு தகவல் தெரிவிக்க சுவிட்சர்லாந்து மறுப்பது தொடர்ந்தால் பன்னாட்டு அமைப்புகளில் கடுமையான நிலைப்பாட்டை இந்திய அரசு எடுக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைமை ஏற்படும்.

வெளிப்படைத் தன்மை யுடன் சுவிட்சர்லாந்து செயல் படவில்லை என்றும் தேவையான சட்ட மற்றும் ஒழுங்கு நெறி அமைப்புகள் அங்கு இன்னும் உருவாக்கப்படவில்லை என்றும் உலக அமைப்புகளில் இந்தியா குற்றம் சாட்டத் தயங்காது. இந்த பிரச்சினை பற்றி ஜி-20 போன்ற அமைப்புகளிலும் புகார் செய்ய இந்தியா நடவடிக்கை எடுக்கும்.

இந்தியர்கள் சிலர் கணக்கில் காட்டாத தமது வருமானம், சொத்துகளை தமக்கு பாதுகாப்பான சில வெளிநாடு களில் பதுக்கி வைத்துள்ளனர். இது இந்தியாவுக்கு பெரிய கவலை தரும் விஷயமாகும். இந்த பிரச்சினையை கையாள இந்த நாடுகள் இது பற்றி தகவலை பகிர்ந்துகொண்டு இந்தியாவுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

முக்கியத் தகவல்களை கொடுத்திட சுவிட்சர்லாந்து தொடர்ந்து மறுத்து வந்தால் எமது நாட்டு சட்டத்தின்கீழ் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை மேற்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா கோரும் விவரங்களைத் தர சுவிஸ் அரசு தயாராக இருப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து டெல்லியில் 2014 பிப்ரவரி 4, 5 தேதிகளில் அதிகாரிகள் நிலையில் இருதரப்பு பேச்சு நடந்தது. அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

562 வழக்குகள் தொடர்பாக இந்தியா முன்வைத்த வேண்டு கோள்களை நிராகரித்து முடிவுக்கு கொண்டுவருவதாக 2014 பிப்ரவரி 20ல் கடிதம் மூலமாக சுவிட்சர்லாந்து தெரிவித்தது.

இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின் ஒரு பிரிவின்கீழ் சுவிட்சர்லாந்துக்கு கடமை இருந்தும் தகவல்களை பரிமாறிக்கொள்ள அது தயாராக இல்லை என்பது இந்தியாவை கவலைக்குள்ளாக்கும் விஷய மாகும்.

வரி ஒப்பந்தத்தின்கீழ் தகவல் களை கொடுக்க உள்நாட்டுச் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர சுவிஸ் அரசு திட்டமிட்டது. இதன்படி எச்எஸ்பிசி வழக்கு சார்ந்த தகவல்களை சுவிட்சர் லாந்து கொடுத்திருக்க முடியும். 2011ல் எச்எஸ்பிசி வங்கியில் கணக்கு வைத்துள்ள 782 இந்தியர்களின் விவரம் கிடைத் தது.

ஆனால், எதிர்க்கட்சிகளின் ஆட்சேபம் காரணமாக சுவிட்சர் லாந்தில் உத்தேச சட்டத் திருத்தம் நிறைவேறவில்லை.

இந்தியாவில் நடந்த வரி ஏய்ப்பு தொடர்பான மிக முக்கிய வழக்குகளில் தகவல் களை பரிமாறிக்கொள்ள சுவிட்சர் லாந்து மறுப்பது இந்தியாவுக்கும் பதற்றம் ஏற்படுத்தக் கூடிய விவகாரமாகும் என சிதம்பரம் தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x