Published : 24 Jan 2014 12:05 PM
Last Updated : 24 Jan 2014 12:05 PM

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரானார் ஜெகதிஷ் ஷெட்டர்

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகதிஷ் ஷெட்டர் வியாழக்கிழமை பொறுப்பேற்றார். இதன் மூலம், கடந்த 8 மாதங்களாக எதிர்க்கட்சி தலைவராக இருந்த குமாரசாமி தனது பதவியை இழந்துள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தனது கர்நாடக ஜனதா கட்சியைக் கலைத்துவிட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு பா.ஜ.க.வில் இணைந்தார். அவருடன் க.ஜ.க.வைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதனால் கர்நாடக சட்டசபையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 44-ஆக உயர்ந்தது.

இந்நிலையில், கர்நாடக சட்டசபை கடந்த புதன்கிழமை தொடங்கியது. அப்போது க.ஜ.க.வைச் சேர்ந்த எடியூரப்பா, யூ.பி.பானகர், குருபாதப்பா நாகமரப்பள்ளி விஷ்வநாத் பாட்டீல் ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களை பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் அமரும் இடத்தில் அமர அனுமதிக்குமாறு கோரினர். இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

வியாழக்கிழமை அவை நட வடிக்கைகள் தொடங்கியதும் பேசிய கர்நாடக சட்டசபை சபா நாயகர் காகோடு திம்மப்பா, "சட்டசபையில் 2-வது பெரும் பான்மை உறுப்பினர்களைக் கொண்ட பா.ஜ.க.விற்கு எதிர்க் கட்சி அந்தஸ்து வழங்கப்படுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. எம்.எல்.ஏக்களின் ஒப்புதலோடு முன்னாள் முதல்வர் ஜெகதிஷ் ஷெட்டரை எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்தார். இதன்மூலம் மதசார்பற்ற ஜனதா தளம் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. அக்கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x