Published : 24 Jan 2017 04:48 PM
Last Updated : 24 Jan 2017 04:48 PM
ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கைகள் வாபஸ் பெறப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்த மனு ஒன்றும் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
மிருக வதை தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ், காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் காளையை சேர்த்து கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. இதன் அடிப்படையில், தமிழகத் தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு நிரந்தர தடை விதித்து கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பு காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளித்து அறி விக்கை வெளியிடப்பட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் மீண்டும் வழக்கு தொடர்ந்த தால், மத்திய அரசின் அறிவிக் கைக்கு தடை விதித்ததுடன், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடை தொடரும் என்று உச்ச நீதி மன்றம் அறிவித்துவிட்டது. இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாத நிலை யில், தமிழக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அறப்போராட்டம் நடத்தியதன் விளைவாக, மத்திய அரசின் மிருக வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, தமிழக அரசு சார்பில் கடந்த 21-ம் தேதி அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர், 23-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக ஏற்கப்பட்டு நிரந்தர சட்டமாக நிறைவேற்றப்பட்டது. தற்போது இச்சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பாக ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, ‘மத்திய அரசின் மிருக வதை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள் ளது. இதற்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறி யுள்ளது.
எனவே, மத்திய அரசு கடந்த 2011-ம் ஆண்டு பிறப்பித்த அறிவிக்கை மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளித்து கடந்த ஆண்டு ஜனவரியில் பிறப் பிக்கப்பட்ட அறிவிக்கைகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான மனு 25-ம் தேதி (இன்று) தாக்கல் செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.
70 கேவியட் மனுக்கள்
மத்திய அரசு கடந்த ஆண்டு பிறப்பித்த அறிவிக்கை குறித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ள நிலையிலும், தமிழக அரசு சார்பில் திருத்தச் சட்டம் நிறை வேற்றப்பட்டுள்ள நிலையிலும், மத்திய அரசு சார்பில் தெரிவிக் கப்பட்டுள்ள இந்த தகவல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதற்கிடையே, தமிழக அரசின் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டால், எங்கள் கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று கேட்டு 70-க்கும் மேற்பட்ட ‘கேவியட்’ மனுக்கள் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT