Published : 03 Feb 2014 09:50 AM
Last Updated : 03 Feb 2014 09:50 AM
திருமலை - திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு அறங்காவலர் குழு தலைவர் பாபிராஜு கூறியதாவது:
பக்தர்களுக்காக முள்ள குண்டா என்ற இடத்தில் ரூ.50 கோடியில் புதிய கார் பார்கிங் கட்டப்படும். ஏழுமலையானுக்கு ரூ.11 கோடி செலவில் 33 கிலோ தங்க காசுமாலையை காணிக்கையாக வழங்க பக்தர் ஒருவர் முன்வந்துள்ளார்.
இதனை ஏற்றுக்கொள்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், ரூ.64 லட்சம் செலவில் கல்யாண வெங்கடேஸ்வரருக்கு தங்கலட்சுமி கவசம் செய்யப்படும்.
திருச்சானூரில், ரூ.5 கோடி யில் புதிய அன்னதான சத்திரம் கட்டப்படும். சித்தூர் மாவட்டம் பீலேர் அருகே ரூ.65 லட்சம் செலவில் ஏழுமலையான் மாதிரி கோயில் கட்டப்பட்டும்.
பக்தர் களின் காணிக்கை முடிகளுக்காக அலிபிரி மலையடிவாரத்தில் ரூ.6 கோடியில் கிடங்கு கட்டப்பட்டும் என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT