Published : 08 Mar 2014 12:00 AM
Last Updated : 08 Mar 2014 12:00 AM
லாலு பிரசாத் யாதவின் மகள் பிஹாரின் பாடலிபுத்ரா தொகுதியில் போட்டியிட ராஷ்டிரிய ஜனதா தளத்தில் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. கட்சியின் ராஜ்யசபை எம்பியும் பொதுச்செயலாளருமான ராம்கிருபால் யாதவ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
பிஹாரின் 40-ல் காங்கிரசுக்கு 12 மற்றும் தேசியவாத காங்கிரசுக்கு ஒரு தொகுதியை பங்கிட்டு போட்டியிடும் லாலு, தனது 27 தொகுதிகளில் 23 வேட்பாளர்கள் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்டார். இதில், பிஹாரின் மேல்சபை உறுப்பினரான அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் மகள் மிசா பாரதி ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
இதில் 54 வயது ராப்ரி, பிஹாரின் சட்டசபை தேர்தலில் ரகோபூர் மற்றும் சோன்பூரில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததால், எம்.எல்.சி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கால் நடை தீவன வழக்கில் சிறை செல்ல நேரிட்ட தால், தன் பதவியில் ராப்ரியை அமர வைத்து பிஹாரின் நிழல் முதல் அமைச்சராக இருந்தார் லாலு. பிறகு எதிர்க்கட்சித்தலைவராக இருந்தும் ராப்ரிக்கு இன்னும் கூட அரசியல் ஈடுபாடு அதிகம் வராத நிலையில் அவர் எம்பி தேர்தலில் இறக்கி விடப்பட்டுள்ளார்.
கடந்த 2009 பொதுத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்ட லாலு தானாபூரில் வென்றாலும் சாப்ராவின் ஐக்கிய ஜனதா தளத்தின் ராஜீவ் ரஞ்சன் யாதவிடம் தோல்வி அடைந்தார். இந்தமுறை கால்நடை தீவன வழக்கில் சிக்கி மூன்று வருடத்திற்கு மேல் தண்டனை பெற்றதால் புதிய சட்டத்தின்படி அவரால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.
எனவே, சாப்ராவில் ராப்ரியும், பாட்னாவில் உள்ள பாடலிபுத்ரா தொகுதியில் (தானாப்பூர் தொகுதியின் புதிய பெயர்) 34 வயது மிசாவை நிறுத்தியுள்ளார். இந்தமுறை ராம்கிருபால் யாதவ் பாடலிபுத்ராவில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பாக தொகுதிப் பணிகளையும் துவங்கிய நிலையில், அறிவிக்கப்பட்ட மிசாவின் பெயர் சிக்கலுக்குள்ளாகி இருக்கிறது.
இதுகுறித்து லாலு செய்தியாளர்களிடம் கூறுகையில், "பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று எனது மகளை அங்கு போட்டியிட வைக் கிறேன். ராம்கிருபால் ராஜினாமா செய்தார் என்பது நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிகிறது என்றார்.
இதற்கிடையே, ராம்கிருபாலை சமாதானப் படுத்தும் வகையில், மிசா பாரதி அவரது வீட்டுக்குச் சென்றார். ஆனால், கிருபால் டெல்லிக்கு சென்றுவிட்டார். இதனால் ஏமாற்ற மடைந்த பாரதி, போட்டியிலிருந்துதான் விலகிக் கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரி வித்தார். டெல்லி சென்ற கிருபால் பாஜகவில் சேரப்போவதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT