Published : 01 Feb 2014 12:00 AM
Last Updated : 01 Feb 2014 12:00 AM
லாவலின் ஊழல் வழக்கில் கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் பினராயி விஜயன் மற்றும் 6 பேரை வழக்கிலிருந்து விடுவித்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
கேரள நீர்மின் நிலையப் பணிகளுக்காக கனடாவை சேர்ந்த எஸ்.என்.சி. லாவலின் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதில் ரூ.374.5 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
பினராயி விஜயன் மற்றும் அரசு அதிகாரிகள் 6 பேருக்கு இதில் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இவ்வழக்கிலிருந்து பினராயி விஜயன் மற்றும் 6 பேரை விடுவித்து திருவனந்தபுரம் சிறப்பு நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, கேரள உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT