Published : 03 Feb 2014 11:18 AM
Last Updated : 03 Feb 2014 11:18 AM
ஸ்பெக்டர்ம் 3-வது கட்ட ஏலம் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இந்த ஏலத்தில் 8 முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர்.
கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஜி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னதாக பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனையடுத்து 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதமும், கடந்த ஆண்டும் ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ஏலம் விடப்பட்டன.
இந்நிலையில் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடையும் அலைக்கற்றை உரிமங்களை ஏலம் விடும் பணி இன்று தொடங்கியது.
அந்த உரிமங்களை பெற பார்தி ஏர்டெல், வோடாபோன், லூப் மொபைல் உள்ளிட்ட 8 நிறுவனங்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் வோடாபோன் சேவை தொடர வேண்டுமானால் இன்று தொடங்கும் ஏலத்தில் உரிமம் பெற வேண்டியது அவசியமாகும். அதே போல் மும்பையில் செவை தொடர் லூப் மொபைலும், டெல்லி, மும்பையில் சேவை தொடர ஏர்டெலும் இன்றைய ஏலத்தில் உரிமம் பெறுவது அசசியமாகும்.
இன்று தொடங்கும் ஏலம் மூலம் மத்திய தொலை தொடர்பு துறைக்கு ரூ.11,300 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியாண்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம், சேவை மூலம் மத்திய அரசுக்கு ரூ.40,874.50 கோடி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT