Published : 12 Nov 2014 12:48 PM
Last Updated : 12 Nov 2014 12:48 PM
பிஹார் மாநிலம் சோன்பூரில் பிரசித்தி பெற்ற கால்நடைச் சந்தையில், யானை மற்றும் குதிரைப் பந்தயங்கள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தாலியைச் சேர்ந்த விலங்குகள் நல அமைப்பின் இந்தியக் கிளை வழக்கு தொடர்ந்துள்ளது.
பிஹார் மாநிலம் சரண் மாவட்டம் சோன்பூரில் ஆண்டு தோறும் நடைபெறும் சோன்பூர் மேளா பிரசித்தி பெற்றது. கங்கைக் கரையில் நடைபெறும் இந்த கால்நடைச் சந்தையில் நாய் முதல் யானை வரை பெருமளவு கால்நடைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த கால்நடைச் சந்தை உலகப் புகழ்பெற்றது. கடந்த 5-ம் தேதி தொடங்கியுள்ள இச்சந்தை வரும் டிசம்பர் 4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சந்தையின் ஒரு பகுதியாக, பல்வேறு வேடிக்கை, சாகச நிகழ்ச்சிகள், குதிரை மற்றும் யானைப் பந்தயங்கள் நடைபெறும்.
இச் சந்தையில் நடைபெறும் யானை, குதிரைப் பந்தயங்களில் வனவிலங்கு நலச்சட்டம் மீறப் படுவதாகக் கூறி, இத்தாலியைச் சேர்ந்த ஐ.ஓ.பி.ஏ. அமைப்பின் இந்திய அமைப்பாளர் நரேஷ் கதியன் புகாரின் பேரில், டெல்லி பிரஷாந்த் விஹார் காவல்நிலை யத்தில் வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது. இது குறித்து ‘தி இந்து’விடம் நரேஷ் கூறியதாவது:
வனவிலங்கு பாதுகாப்பு சட்டப் படி, வன விலங்குகளை பொழுது போக்கு கேளிக்கைகளுக்காக பயன்படுத்தக் கூடாது. ஆனால், இந்த சந்தையில் வன விலங்கு களான யானைகளை வைத்து ஓட்டப் பந்தயம் நடத்தப்படுகிறது. இந்தியாவில் குதிரை பந்தயம் நடத்த, 33 கிளப்புகளுக்கு மட்டும் அரசு அனுமதி உள்ளது. ஆனால், சோன்பூர் மேளாவில் அனுமதி யின்றி பந்தயங்கள் நடத்தப்படு கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மற்றொரு வழக்கு
சோன்பூர் மேளாவில் விலங்கு களின் பந்தயங்களைத் தடை செய்யக் கோரி, பிஹாரை சேர்ந்த மற்றொரு விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர் அமைப்பும் பாட்னா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்துள்ளது.
இதனால், விலங்குகளின் ஓட்டப்பந்தயங்கள் நடத்த சோன்பூர் மேளாவில் அனுமதி இல்லை என சரண் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. யானை களை சங்கிலியால் கட்டி வைக்கக் கூடாது என வனத்துறை அறிவித் துள்ளது.
ஆனால், மேளா தொடங்கிய மறுநாளே குதிரைகள் பந்தயம் ஒருமுறை நடந்துள்ளது. யானை களின் பந்தயம் இதுவரை நடைபெறவில்லை.
இது குறித்து ‘தி இந்து’விடம் பேசிய சோன்பூர் மேளா வியாபாரி ராம் சிங் யாதவ் கூறும்போது, ‘பந்தயம் நடத்தவில்லை என்றால் எந்தக் குதிரை சக்தி வாய்ந்தது என எப்படி அறிய முடியும். இதை அறிந்து கொள்ளாமல் அதை யாரும் வாங்க முன்வரமாட்டார்கள். யானைகளை சங்கிலியால் கட்டி வைக்கக் கூடாது எனில், அது பொதுமக்கள் திரளாக வரும் போது ஆபத்தாகி விடாதா?’ என்றார்.
சோன்பூர் மேளாவில் பறவை கள், நாய்கள், குதிரைகள், ஒட்ட கங்கள் மற்றும் யானைகள் என பல்வேறு வகை விலங்குகள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்படுகின்றன.
யானை விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளதால், `அன்பளிப்பு’ என்ற பெயரில் சட்டவிரோதமாக யானைகள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. கோயில்களுக்காக யானைகள் வாங்கவும் தமிழகத்தில் இருந்து இங்கு வருவது உண்டு
`ஜீரோ எப்.ஐ.ஆர்’
சம்பவம் நடந்த இடத்திலிருந்து அல்லாமல் இந்தியாவில் எந்த இடத்தில் இருந்து வேண்டுமா னாலும் செய்யப்படும் புகாரின் பேரில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குக்கு `ஜீரோ எப்.ஐ.ஆர்’ என்று பெயர். இது, பிறகு சம்பந்தப்பட்ட காவல் நிலைய விசாரணைக்காக அனுப்பி வைக்கப்படும். சோன்பூர் மேளா வில் நடைபெறும் பந்தயங்களுக்கு தடை விதிக்கக்கோரும் புகாரும், ஜீரோ எப்ஐஆர் முறையிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT