Published : 14 May 2017 12:12 PM
Last Updated : 14 May 2017 12:12 PM
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்கத்தா வழியாக ரூ.1,500 கோடிக்கு ஹவாலா பண மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம் போலீஸ் இணை ஆணையர் நவீன் குலாட்டி கூறும்போது, ‘‘வெளிநாட்டில் இருந்து ரூ.680 கோடி ஹவாலா பணம் பெறப்பட்டிருப்பதை அண்மையில் கண்டுபிடித்தோம். அதில் ரூ.569 கோடி போலி ஆவணங்கள் மூலம் இங்கிருந்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைக் கப்பட்டவை. இவை அனைத்தும் கறுப்புப் பணம். ஹவாலா மோசடிக்காக 30 போலி நிறுவனங் கள் உருவாக்கப்பட்டு, அதன் பெயரில் போலி வங்கி கணக்கு களும் தொடங்கப்பட்டுள்ளன. அந்த வங்கி கணக்குகள் மூலம் வரி கட்டாமல் கோடிக்கணக்கில் வெளிநாடுகளுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது’’ என்றார். சில வங்கி அதிகாரிகளின் உதவியுடன் ரூ.1,500 கோடி வரை ஹவாலா பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தை சேர்ந்த வட்டி நிவாச ராவின் மகன் வட்டி மகேஷ் தான் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி என போலீஸார் தெரிவிக்கின்றனர். இவரை விசாகப்பட்டினம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மகேஷை தவிர கொல்கத்தாவை சேர்ந்த சிலருக்கும் இவ்வழக்கில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விசாகப்பட்டினம் போலீஸார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் விசாரிப்பதற்காக கொல்கத்தா விரைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT