Last Updated : 06 Nov, 2014 03:59 PM

 

Published : 06 Nov 2014 03:59 PM
Last Updated : 06 Nov 2014 03:59 PM

தாலியை விற்று கழிப்பறை கட்டிய பெண்ணுக்கு மகாராஷ்டிர அமைச்சர் பங்கஜா முண்டே கவுரவிப்பு

மகாராஷ்டிரத்தில் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தாலியை விற்று கழிப்பறை கட்டியுள்ளார். இவரது செயலை அம்மாநில அரசு கவுரவித்துள்ளது.

வாஷிம் மாவட்டத்தில் உள்ள சைகேதா என்ற கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா என்ற இந்தப் பெண்ணை, மகாராஷ்டிர ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பங்கஜா முண்டே கவுரவித்தார்.

"நகை உள்ளிட்ட ஆபரணங்களை விட கழிப்பறை அத்தியாவசியமானது, நான் எனது ஆபரணங்கள் அனைத்தையும் விற்று, கழிப்பறையைக் கட்டினேன்" என்று முண்டேயின் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் சங்கீதா.

"நாட்டில் பல இடங்களில் சரியான கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் பெண்களுக்கே அதிக பிரச்சினை ஏற்படுகிறது. நான் எனது அமைச்சர் பதவிக் காலத்தின் முதல் கட்டத்தில் கழிப்பறைக் கட்டுவதற்கு 25% நிதி ஒதுக்கினேன்” என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பங்கஜா முண்டே தெரிவித்தார்.

மேலும், அதிக கழிப்பறைகளைக் கட்டி பெண்களை இந்த இடர்பாட்டிலிருந்து நீக்கவும் தான் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

தாலியை விற்று கழிப்பறை கட்டிய சங்கீதாவுக்கு புதிய தாலியையும் அளித்து கவுரவித்தார் அமைச்சர் பங்கஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x