Published : 29 Jun 2017 01:30 PM
Last Updated : 29 Jun 2017 01:30 PM
பொது இடத்தில் சிறுநீர் கழித்ததால் மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோகன் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.
சமூக வலைதளங்களில் இது தொடர்பான புகைப்படம் வெளியாகி பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தப் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
தூய்மை இந்தியாவை சுட்டிக் காட்டி..
மத்திய அமைச்சரின் இந்தப் புகைப்படம் வெளியானதையடுத்து சமூக வலைதளங்களில் இதைப் பலரும் பகிர்ந்து தூய்மை இந்தியா திட்டத்தை விமர்சித்து வருகின்றனர்.
தூய்மை இந்தியா திட்டம் மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றவுடன் மிகப் பெரிய அளவில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட திட்டம் இது. பிரதமர் மோடியால் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டமானது பொது இடங்களை கழிப்பிடங்களாக பயன்படுத்துவதைத் தடுக்கும் விதத்தில் அறிவிக்கப்பட்டது.
இதைச் சுட்டிக்காட்டி, மத்திய அமைச்சரே இப்படி செய்யலாமா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏற்கெனவே இம்மாத துவக்கத்தில் மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்து 5 பேர் பலியான நிலையில் யோகா குரு பாபா ராம் தேவுடன் யோகா நிகழ்ச்சியில் ராதாமோகன் கலந்து கொண்டது சர்ச்சையைக் கிளப்பியது. தற்போது அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT