Published : 20 Jan 2014 12:00 AM
Last Updated : 20 Jan 2014 12:00 AM

காரைக்காலில் இன்று கடல்சார் மையம் திறப்பு- அரசு விழாவில் புதுச்சேரி ஆளுநர் பங்கேற்பு: முதல்வர் புறக்கணிப்பு?

புதுச்சேரியில் ஆளுநர் -முதல்வர் இடையிலான மோதல் உச்சக் கட்டத்தில் இருக்கும் நிலையில் திங்கள்கிழமை காரைக்காலில் நடக்க உள்ள அரசு விழாவில் மத்திய அமைச்சர்கள், ஆளுநர் ஆகியோருடன் முதல்வர் பங்கேற் பாரா அல்லது புறக்கணிப்பாரா என கேள்வி எழுந்துள்ளது.

புதுவையில் ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவுக்கும், முதல்வர் ரங்கசாமிக்கும் இடையில் அதிகாரிகள் பணிமாற்றம் தொடர் பாக மோதல் வெடித்தது. இருதரப்பிலும் சரமாரியாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. காரைக்காலில் சுற்றுலாத்துறை நடத்திய விழாவில் ஆளுநர் வீரேந்திர கட்டாரியா பங்கேற்றதால் முதல்வர் புறக்கணித்தார்.

இந்நிலையில், திங்கள்கிழமை காரைக்கால் கீழகாசாகுடியில் இந்திய கடல்சார் பல்கலைக்கழ கத்தின் பிராந்திய வளாகம் திறப்பு விழா நடக்கிறது. இதில் மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, ஆளுநர் வீரேந்திர கட்டாரியா, முதல்வர் ரங்கசாமி ஆகியோ ருக்கு அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்கிறார். அவர் திங்கள் கிழமை பகல் 1.30 மணிக்கு கார் மூலம் காரைக்கால் புறப்பட்டு செல்கிறார். முதல்வர் ரங்கசாமி தரப்பில் விசாரித்தபோது, விழாவில் பங்கேற்பது குறித்து இறுதி முடிவை கடைசி நேரத்தில் முதல்வர்தான் எடுப்பார். உறுதி யாக தெரிவிக்க இயலாது என்றனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, “புதுச் சேரியில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் விழாவில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்பதே இல்லை. தற்போது மாநில அரசு விழாக் களையும் புறக்கணிக்க தொடங்கி யுள்ளார்” என்று கூறினர்.

தற்போதைய சூழலில் விழாவில் முதல்வர் பங்கேற்பாரா அல்லது புறக்கணிப்பாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

நாராயணசாமி கருத்து

காரைக்காலில் முதல்வர் பேசியதற்குத்தான் ஆளுநர் பதிலளித்தார்; இதை முதல்வர் தவிர்த்திருக்கலாம் என்று மத்திய இணையமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்தார்.

புதுச்சேரி கம்பன் கலையரங்க வளாகத்தில் புதிதாக 140 பயனாளி களுக்கு ஓய்வூதியத்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சி யில் நாராயணசாமி பேசிய தாவது:

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஓய்வூதியத் தொகை தரும் பயனாளிகளை அரசுக்குப் பரிந்துரைத்தோம். அதில் 140 பேருக்கு இத்தொகை தர அனுமதி கிடைத்து தற்போது வழங்கியுள்ளோம். அளித்த மனுக்களுக்கு அனுமதி தந்தது எந்த அரசாக இருந்தாலும் நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

இதையடுத்து செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:

ஓய்வூதியத்தொகையை ஆயிரத்திலிருந்து ரூ. 1,100 ஆக ஆளும் என்.ஆர். காங்கிரஸ் அரசு உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில் ரங்கசாமி தனது தேர்தல் அறிக்கையில் ஓய்வூதியத் தொகையை ரூ. 2,000 ஆக உயர்த்துவதாக வாக்குறுதி தந்தார். தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட அவர் நிறை வேற்றவில்லை.

காரைக்காலில் முதல்வர் சில பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநரைக் குறை கூறி பேசினார். அதற்கு ஆளுநர் பதிலளித்தார். இது புதுவை அரசு நிர்வாக பிரச்சினை. நாங்கள் நிர்வாகத்தில் இல்லை. நிர்வாக பிரச்சினையில் தலையிட மாட்டேன். முதல்வர் பேசியதற்குப் பிறகுதான் ஆளுநர் பதிலளித்தார்.

முதல்வர் இதைத் தவிர்த்திருக்கலாம். மேலும் ஆளுநர் மாநில அரசுக்கு ஒத்துழைப்பதாக தனது பத்திரிகை செய்தியில் தெரி வித்துள்ளார். அதே போல் மாநில அரசும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x