Published : 10 Jun 2016 09:06 AM
Last Updated : 10 Jun 2016 09:06 AM

காப்பு பிரிவினருக்கு இடஒதுக்கீடு கோரி முன்னாள் அமைச்சர் போராட்டம்

ஆந்திர மாநிலத்தில் நாயுடு வகுப்பில் காப்பு பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் எம். பத்மநாபம் தலைமையில் கிழக்கு கோதாவரி மாவட்டம் துணி பகுதி யில் பொதுக்கூட்டம் நடத்தப்பட் டது. அப்போது கலவரம் வெடித் தது. ரத்னாச்சல் எக்ஸ்பிரஸ் ரயிலை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தி னர். துணி காவல் நிலையமும் சூறை யாடப்பட்டு, காவல் துறை வாகனங் களும் கொளுத்தப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், முதல்வர் தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி காப்பு பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று முதல் முன்னாள் அமைச்சர் எம். பத்மநாபம் தனது வீட்டில் சாகும் வரை உண்ணாவிரத போராட் டத்தை தொடங்கினார். இதனால் அவரது வீட்டின் முன் காப்பு சமுதா யத்தை சேர்ந்த ஆயிரக்கணக் கானோர் திரண்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக பத்மநாபத்தை கைது செய்ய டிஐஜி ராமகிருஷ்ணா, எஸ்.பி ரவிபிரகாஷ் தலைமையில் போலீ ஸார் அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது கதவை மூடிக்கொண்டு, “கைது செய்தால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்” என பத்மநாபம் மிரட்டல் விடுத்தார். இதனால் போலீஸார் பின் வாங்கினர்.

துணி ரயில் நிலையத்தில் ரயில் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் களை எக்காரணத்தாலும் விடுவிக்க முடியாது என ஆந்திர மாநில துணை முதல்வர் சின்ன ராஜப்பா நேற்று தெரிவித்தார்.

ரவுடிகளை கைது செய்தது தவறா? என முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பி உள்ளார். துணி ரயில் எரிப்பு சம்பவத்தின் பின்னணியில் ஜெகன் மோகன் ரெட்டி இருப்பதாகவும் முதல்வர் சந்திரபாபு குற்றம்சாட்டி உள்ளார்.

இதனிடையே நேற்று மாலை முன்னாள் அமைச்சர் பத்மநாபம் கைது செய்யப்பட்டார். தடுக்க முயன்ற அவரது ஆதரவாளர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். கைது செய்யப்பட்ட பத்மநாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x