Published : 05 May 2017 10:11 AM
Last Updated : 05 May 2017 10:11 AM
சமீபத்தில் உத்தரபிரதேசம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடந்தது. இதில் பாஜக அமோக வெற்றி பெற்றது. பல மாநில கட்சிகள் படுதோல்வி அடைந்தன. அதன்பின் கடந்த மாதம் டெல்லி யில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. அதிலும் பாஜக வெற்றி பெற்றது.
ஐந்து மாநில தேர்தலின் போது உ.பி.யில் தோல்வி அடைந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி நடந்துள்ளது. எனவே, வாக்குச் சீட்டு முறையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறினார்.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்கின்றன. எனவே, டெல்லியில் வாக்குச் சீட்டு முறையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்தப் பிரச்சினையைப் பெரிதாக கிளப்பினர்.
இவற்றுக்கு தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி பதில் அளிக்கையில், ‘‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் எந்த வகையிலும் மோசடி நடத்த முடியாது. அந்தளவுக்குப் பல பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்படுகிறது. வாக்குப் பதிவு இயந்திரத்தை தயாரிக்கும் நிறுவனமே நினைத்தாலும் கூட அதில் எந்த முறைகேடும் செய்ய முடியாது. மேலும் இனி வரும் தேர்தல்களில் இவற்றை உறுதிப்படுத்த விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும்’’ என்று தெரிவித்தார்.
அதன்படி, வரும் 12-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கூட்டத்தில் 7 தேசிய கட்சிகள், 49 மாநில கட்சிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று தெரி கிறது.
டெல்லியில் நடக்கும் இந்தக் கூட்டத்தில், அரசியல் கட்சிகளின் பல்வேறு புகார்களுக்கு தேர்தல் ஆணையம் தகுந்த விளக்கத்தை அளிக்க உள்ளது. அதேபோல், மின்னணு வாக்குப் பதிவு இயந் திரத்தில் மோசடி நடப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அரசியல் கட்சிகள் எடுத்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT