உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் கலவரம் பாதித்தவர்களுக்கான முகாமில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
முசாபர்நகரில் கலவரத்தால் வீடுகளை இழந்தவர்கள், ஃபுகானா பகுதியில் உள்ள ஜோக்யா கேரி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், முகாமில் இருந்த 20 வயது இளம்பெண்ணைத் தூக்கிச் சென்று இருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரைத் தொடர்ந்து, சச்சின் மற்றும் சுனில் குமார் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையில், அவர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று கைதான இருவரும் மிரட்டியிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முசாபர்நகர் முகாமில் நடந்த இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
WRITE A COMMENT
Be the first person to comment