

நாட்டின், முதல் அனைத்து மகளிர் வங்கி (பாரதிய மஹிலா வங்கி) இன்று லக்னொவில் திறக்கப் படுகிறது. இதனை பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மும்பையில் இருந்தவாரே கானொளி காட்சி மூலம் திறந்து வைக்கின்றனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 96-வது பிறந்த தினமான இன்று வங்கி திறக்கப்படுகிறது.
லக்னொவ் சிவில் மருத்துவமனை முன்னர் உள்ள வணிக வளாகத்தில் இந்த வங்கிக் கிளை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் 10 பெண்கள் பணிபுரிவார்கள்.
2013-2014 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தபோது, முதல்கட்டமாக ரூ.1000 கோடி செலவில் அனைத்து மகளிர் வங்கி (பாரதிய மஹிலா வங்கி) அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, நாட்டின் முதல் அனைத்து மகளிர் வங்கி லக்னொவில் இன்று திறக்கப்படுகிறது. 2014- மார்ச் 31-க்குள் நாடு முழுவதும் 25 அனைத்து மகளிர் வங்கிக் கிளைகளை திறப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.