Published : 04 Jan 2014 12:00 PM
Last Updated : 04 Jan 2014 12:00 PM

ஜி.எஸ்.எல்.வி-டி5 கவுன்ட்டவுன் தொடங்கியது: இன்று விண்ணில் பாய்கிறது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட்டவுன் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் விண் வெளி மையத்தில் சனிக்கிழமை காலை 11.18 மணிக்குத் தொடங்கியது.

இதுகுறித்து இஸ்ரோ செய்தித் தொடர்பாளர் தேவி பிரசாத் கார்னிக், அளித்த பேட்டியில் கூறியதாவது:

1980 கிலோ எடை கொண்ட ஜிசாட்-14 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.18 மணிக்கு ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய உள்ளது.

அதற்கான 29 மணி நேர கவுன்ட்டவுன் சனிக்கிழமை காலை 11.18 மணிக்குத் தொடங்கியது என்றார். ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் 50 மீட்டர் உயரம் அதாவது 17 மாடிகள் உயரம் கொண்டதாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x