Last Updated : 15 Nov, 2014 09:05 AM

 

Published : 15 Nov 2014 09:05 AM
Last Updated : 15 Nov 2014 09:05 AM

‘தமிழகத்தின் எதிர்ப்பை மீறி மேகேதாட்டு குடிநீர் திட்டம் நிறைவேறும்’: கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் பேட்டி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் 2 புதிய அணை கள் கட்டி கூட்டு குடிநீர் திட்டம் நிறை வேற்றப்படும். இதற்கான உலக ளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யும் பணி வருகிற 30-ம் தேதியுடன் முடிவடையும் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே அணை கள் கட்டப்பட்டால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீர் முழுமை யாக கிடைக்காது என்று பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் குதித்துள்ள‌னர்.

தமிழகத்தின் எதிர்ப்பை மீறி காவிரி ஆற்றின் குறுக்கே அணைகளை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்ட‌ வரைவு பணிகள், ஒப்பந்தப் புள்ளிகள் கலந்தாய்வு, நிபுணர் களின் அறிக்கை, சட்ட நிபுணர் களிடம் கருத்து கேட்கும் பணிகளை கர்நாடக அரசு முடுக்கி விட்டுள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டச்சிக்கல் இல்லை

இது தொடர்பாக உண்மை விவரங் களை அறிவத‌ற்காக கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலை, ‘தி இந்து' சார்பாக சந்தித்தோம். அப்போது அவர் கூறியதாவது:

பல ஆண்டுகளுக்கு முன்பே மேகேதாட்டுவில் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்ற கர்நாடக அரசு பரிசீலனை செய்தது. இந்தத் திட்டத்தை நான் புதிதாக தொடங்கவில்லை.

மேகேதாட்டு கூட்டுக் குடிநீர் திட்ட‌ம் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது இல்லை.

காவிரி நடுவர் மன்றம் வழங் கிய தீர்ப்பில் காவிரி ஆற்றின் உபரிநீரை கர்நாடக மக்களின் பொதுநலனுக்காகப் பயன்படுத் திக் கொள்ளலாம் என கூறியுள் ளது. எனவே மைசூரு மக்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட இருக்கும் இந்த குடிநீர் திட்டத் துக்கு தடை விதிக்க முடியாது. இது தொடர்பாக காவிரி வழக்கில் எங்களுக்காக வாதாடிய‌வரும் கர்நாடக அரசின் சட்ட ஆலோசக ருமான மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ். நரிமனிடம் விசாரித்தேன்.

மேகேதாட்டுவில் கர்நாடகா செயல்படுத்தும் எந்த திட்டத்துக் கும் சட்டச்சிக்கல் இல்லை. இதற்கு தமிழக அரசோ, கேரள அரசோ தடை கோர முடியாது. அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பிலே இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டநிபுணர்களின் ஒப்புதலுக்கு பிறகே கர்நாடக அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது.

இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்

புதிய அணைகளை கட்டுவதற் காக உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கடந்த ஆண்டே கோரப் பட்டன. இந்த ஒப்பந்த புள்ளிகள் வந்து சேர நவம்பர் 30-ம் தேதி கெடு விதிக்கப்ப‌ட்டுள்ளது.

மேகேதாட்டு கூட்டு குடிநீர் திட்டத்துக்கான திட்ட வரைவு பணிகள் முடிந்த பிறகு மத்திய நீர்வளத் துறையிடம் தடையில்லா சான்றிதழ் கோரப்படும். அதே போல அணைகள் கட்டுவதற்கு வனப்பகுதியில் உள்ள சுமார் 2500 ஏக்கர் நிலத்தை பயன்படுத்த வேண்டி இருப்பதால் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலையும் பெறுவோம். பொதுமக்களின் நலனுக்காக நிறைவேற்றப்படும் திட்டம் என்பதால் மத்திய அரசு எளிதில் தடையில்லா சான்றிதழ் வழங்கும் என நம்புகிறோம்.

தமிழகம் எதிர்க்கக் கூடாது

கர்நாடக அரசின் இந்த திட்டத் துக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிப் பது துரதிருஷ்டவசமானது. அரசியல் கட்சிகள் சுயநலத்துக் காக எதிர்க்கிறார்கள். கர்நாடக அரசின் ‘நமது மண்.. நமது நீர்.. நமது உரிமை' என்ற கொள்கை யின்படி காவிரியில் அணை கட்டு வது எங்களுடைய உரிமை. இதில் கர்நாடக அரசு சட்டத்துக்கு புறம்பாக ஒருபோதும் செயல் படாது. கர்நாடக மாநில மக்களின் குடிநீருக்காக நிறைவேற்றப்படும் இந்தத் திட்டத்தை தார்மீகரீதியாக யாரும் எதிர்க்கக்கூடாது. இவ் வாறு அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறினார்.

‘மேகேதாட்டு' விளக்கம்

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்ட எல்லையில் ‘மேகேதாட்டு' என்ற இடம் உள்ளது.பாறைகளும் அருவிகளும் நிறைந்த இங்கு காவிரி ஆறு பாய்ந்தோடுகிறது. முதலில் ‘மேகதாத்' என்று அழைக்கப்பட்ட இந்த இடம், தற்போது ‘மேகேதாட்டு' என பெயர் மாற்றப்பட்டுள்ளது. கன்னடத்தில் ‘மே' என்றால் ‘ஆடு', `தாட்டு' என்றால் ‘தாண்டிய' என பொருள். எனவே மேகேதாட்டுவை தமிழில் ‘ஆடு தாண்டிய' என்று பொருள் கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x